உலகம்

இந்திய ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று – 125 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | இந்தியா) – இந்தியா, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 125 குடும்பங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 18,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 592 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

ஜெர்மனியில் ஐயாயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

மரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி