உள்நாடுவணிகம்

பேலியகொடை மீன் சந்தை 3 நாட்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – பேலியகொடை பகுதியில் உள்ள மீன் சந்தையை நாளை(22) முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிலியந்தலை பகுதியில் உள்ள மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறித்த மீன் வியாபாரி ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று மீன் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுட்டதை தொடர்ந்தே பேலியகொடை மீன் சந்தையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் உள்ள அதன் விற்பனையாளர்கள் நாளை(22) PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 82 பேர் வெளியேறியுள்ளனர்

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகளும் இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ