உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(UTVNEWS | கொவிட் 19) -கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதுவரை இரவு 8 மணிதொடக்கம் அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் இந்த மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீக்கப்பட்டுள்ளது.

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணிக்கும் பசில்

எரிபொருள் விற்பனையில் பற்றி அவசர கோரிக்கை