உலகம்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் பலி எண்ணிக்கை உயர்வு

(UTV|கொவிட் -19)- உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 16,365 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நோய் பாதிக்கப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 974 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 2,466 பேர் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அடங்கினார் இளவரசர் சார்லஸ்

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்பு

ஸ்வீடன் முதல் பெண் பிரதமராக மக்தலீனா