உலகம்

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 32 ஆயிரத்து 165 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 535 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 22 லட்சத்து 58 ஆயிரத்து 909 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவியவர்களில் இதுவரை 5 லட்சத்து 75 ஆயிரத்து 837 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனால் இந்த கொடிய வைரசுக்க்கு இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 388 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Related posts

கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி

கொரோனா – பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது

அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாடத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி