உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு

(UTV|கொவிட்- 19)- கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 703 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதம் 23ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.

கங்காராம வெசக் நிதியத்திலிருந்து 10 மில்லியன் ரூபாவும் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சங்கம் அன்பளிப்பு செய்த 2.5 மில்லியன் ரூபாவை கலாநிதி சங்கைக்குரிய மல்வானே சந்திரரத்ன தேரர் நேற்று(16) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் 2.5 மில்லியன் ரூபா, எஸ்.டீ அமரசிங்க ஒரு மில்லியன் ரூபாவையும், ஹுவாவி டெக்னொலொஜீஸ் பிரைவட் லிமிடற் நிறுவனம் 1.5 மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர்.

Related posts

இன்று முதல் 10 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு!

பதில் காவல்துறைமா அதிபருக்கு சட்டமா அதிபரால் அறிவிப்பு

நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது