உள்நாடு

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்று இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று(16) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மீண்டும் குறித்த இந்த மாவட்டங்களில் ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முக கவசத்தை அணியாமல் வருவோர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டள்ள காலப்பகுதியில் வீதிகளில் அநாவசியமாக நடமாடும் பாதசாரிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

Related posts

மலையக மக்களுக்காக தனி விவாதம் நடாத்த தயாராகும் இலங்கை பாராளுமன்றம்!

சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படவும் – சாகர, சஜித்திடம் வலியுறுத்தல்

நீதிமன்றை அவமதித்த மைத்திரி மீது மனு தாக்கல்!