உள்நாடு

டெங்கு நோய் பரவுக்கூடும் அபாயம்

(UTV|கொழும்பு)- பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ளதினால் டெங்கு நோய் பரவுக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் நுளம்புகள் பெருகும் இடங்கள், வீட்டை சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

டெங்கு நுளம்புகள் பரவும் வளாகங்களை சுத்தப்படுத்தி, டெங்கு நோய் அனர்த்தத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர பொது மக்களிடம கேட்டுக்கொண்டுள்ளார்

வறட்சியான காலநிலை காரணமாக, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில்

எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

கொம்பனித் தெரு மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]