உள்நாடு

சுப நேரத்தில் எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) -புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரம் இன்று (13) இரவு 10.43 க்கு உதயமாவதுடன் அந்த நேரத்தில் நாட்டுக்கு பெறுமதியானனதும், உங்களுக்கு பயன்மிக்கதுமான விடயங்களை எழுதுமாறு கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும சகல மாணவ மாணவிகளையும் கேட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் வழிக்காட்டலில் தேசிய நூலகம் மற்றும் ஆவணங்கள் சேவைகள் சபை ஆகியவை நடைமுறைப்படுத்தும் ´விடுமுறையில் எழுதும் நாடு…பெறுமதியான புத்தகம்´ என்ற தொனிபொருளுக்கு அமைய கல்வியமைச்சரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரத்தில் பேனை அல்லது பென்சில் போன்ற எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கல்வியமைச்சர்  சகல மாணவ மாணவிகளையும் கேட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் மாணவர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Related posts

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்களுக்கு பூட்டு

புதிய தலைமையை முன்னிறுத்த தயார்

நாட்டை மீட்க சம்மந்தன் , மனோ கட்சி அவசியம் – வஜிர அபேவர்த்தன