(UTVNEWS | COLOMBO) – சிறு குற்றங்களை புரிந்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.