உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் அரிசி வகைகளுக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயித்து பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டரிசி குத்தரிசி ஒரு கிலோவின் அதிகூடிய சில்லறை விலையாக 90 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பா ஒரு கிலோ சிவப்பு, வெள்ளை ஒரு கிலோ 90 ரூபாயும், கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாயும், வெள்ளை, சிவப்பு நாடு ஒரு கிலோ 85 ரூபாயும் அதிகூடிய சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை நிர்ணயம் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வருவகின்றது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகார சபை விற்பனையாளர்களை எச்சரித்துள்ளது.

Related posts

அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று போராட்டம்

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

வலுக்கும் கொரோனா