(UTVNEWS | SPAIN) -அமெரிக்காவைவிட ஸ்பெயினில் அதிகமானோர் கோரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் இதுவரை 14 ஆயிரத்து792 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 48 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்து 15 இலட்சத்து 17 ஆயிரத்து 95 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கை 88 ஆயிரத்து 441 பேராக அதிகரித்துள்ளது.
அதேசமயம் கோரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 30 ஆயிரத்தை நெருங்குகிறது
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த இரு நாள்களாக உயிரிழப்புகள் மிக மோசமாக அதிகரித்து இரு நாள்களுமே ஏறக்குறைய நாள்தோறும் 2 ஆயிரம் பேர்வரை உயிரிழந்துள்ளர்கள்.
கோரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 774 பேராக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 இலட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் கோரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கோரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இத்தாலிதான் உலகிலேயே அதிகமான உயிரிழப்பை கோரோனா வைரஸால் சந்தித்துள்ளது.இத்தாலியில் இதுவரை 17 ஆயிரத்து 669 பேர் உயிரிழந்துள்ளனர், நேற்றுகூட 542 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இத்தாலியில் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 422 ஆக உயர்ந்துள்ளது. கோரோனா நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரமாக இருக்கிறது.