(UTV|COLOMBO) – கொழும்பு நகரின் சில பகுதிகளில் நாளை(09) பிற்பகல் 1 மணி முதல் 18 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
நிலக்கீழ் திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு 9, கொழும்பு 14 மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு 13 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்ததில் நீர்விநியோகம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.