உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 17,717 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) –  நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(07) காலை 6 மணி முதல் இன்று (08) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 1,815 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, 595 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 4,586 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுமெனவும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாற்றமடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் – கனக ஹேரத்.

மேலும் ஒரு தொகை பைசர் நாட்டிற்கு

இன்று மழையுடன் கூடிய காலநிலை