(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜொன்சனின் உடல்நிலைமை மோசமடைந்ததை அடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 10 நாட்களின் பின்னர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.