உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1327 பேர் கைது

(UTV|கொழும்பு)- நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(05) காலை 6 மணி முதல் இன்று(06) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 1327  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு,  312 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 14,795  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 3665  வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஹூதிகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கப்பல்கள்: விஜயபாகு – கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார்

சாதாரண தர பரீட்சை – விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

O/L : மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு