உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் தொடர்பில் இராணுவ தளபதி கருத்து

(UTVNEWS | COLOMBO) –இராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று (4) ஆம் திகதி நடைபெற்றது.

கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சட்ட வழக்கறிஞ்சரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோகன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இந்த ஊடக கருத்தரங்கில் இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில் “இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளுக்கு பின்பு கட்டுகெலியாவா மற்றும் கண்டக்காடு மற்றும் விமானப்படையினரால் நிர்வாகித்து வரும்இரனைமாடு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த மொத்தம் 286 பேர்கள் பூரன பரிசோதனைகளின் பின்பு தரமான சான்றிதழ்களுடன் நேற்று (4) ஆம் திகதி தங்களது வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்துடன் நாடாளவியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் இராணுவத்தினரால் முப்பத்தியேழும், விமானப் படையினர்களால் இரண்டும், கடற்படையினரால் ஒன்றும் நிர்வாகித்து வருவதாக தெரிவித்தார்.

“இந்த நாட்டின் மூத்த குடிமக்களாக இருக்கும் மொத்தம் ஓய்வூதியம் பெரும் 3.5 இலட்ச பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்காக கடந்த மூன்று நாட்களாக முப்படையினர்கள் மற்றும் அந்த பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர்களது ஒருங்கிணைப்புடன் சேவைகளையும் வழங்கி வைத்தனர் அத்துடன் இவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்காக இராணுவத்தினரால் போக்குவரத்து வசதிகளையும் வழங்கி வைத்தனர்.

தற்போது, அத்துலுகம மற்றும் அக்குரன, பண்டாரகம சர்வோதய நிலையம் மற்றும் புத்தளம் சாஹிரா கல்லூரிகளில் தனிமைபடுத்தபட்ட மையங்களாக பயன்படுத்தப்பட்டு 14 நாட்கள் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன்யாழ் குடாநாட்டிலும் 20 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஊடக சந்திப்பின் போது ஊடகங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட வழக்கறிஞ்சரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது

சட்ட ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை

கோட்டபாயவுக்கு வேட்பாளர் என்ற போது எதிர்த்து நின்ற நபர்!