உள்நாடுசூடான செய்திகள் 1

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய 19 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் , ஏப்ரல் 06, திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

நிறைவுகாண் மருத்துவவர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

ஜனாதிபதியின் வேண்டுகோள்