புகைப்படங்கள்

HomeGardenChallenge இல் பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அனைவரும் வீடுகளில் உள்ள நிலையில் வீட்டுத்தோட்டங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசாங்கமும் முக்கிய பிரபலங்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் அவரின் பாரியார் ஷிராந்தியும் இணைந்து வீட்டுத்தோட்ட சவாலில் #HomeGardenChallenge இல் ஈடுப்பட்டுள்ளார்கள்.

இதுகுறித்த புகைப்படத்தை பிரதமர் அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதேவைளை, நாமல் ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் இந்த திட்டத்தி்ல் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களான இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, டினேஸ் சந்திமல், திஸர பெரேரா உள்ளிட்ட சிலரும் வீட்டுத்தோட்ட சவாலில் ஈடுப்பட்டு தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

 

Image

Image

Image

Image

Image

Image

 

 

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கை தயார் நிலையில்

கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்..

Maduruoya-Groomed 319 More Elite SF Soldiers Vow to Reach Their Goal Fearlessly