உள்நாடு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் தினேஸ் குணவர்தன வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இது குறித்த தீர்மானம் எடுக்கட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் அவதியுறும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

உலக நாடுகளுடன் இலங்கை முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் சம்மந்தமாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சர் அதிகாரிகளை பணித்துள்ளார்.

Related posts

இன்றும் 562 பேர் நோயிலிருந்து மீண்டனர்

புதிய அமைச்சரவைக்கான கட்டமைப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள்