உள்நாடு

இன்றும் மருந்தகங்கள் திறப்பு

(UTV|கொழும்பு) –  நாடளாவி ரீதியில் மருந்துகளை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் 11,765 பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள  நிலையில் அரச மருந்தகங்களில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்களுக்கு அவற்றை தபால்துறை ஊடாக விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் வைத்தியசாலைகளில் மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு , கிளினிக் மூலம் பதிவு செய்துள்ள நோயாளர்களுக்கான மருந்துகளை   குறித்த நோயாளிகளின் வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக நோயாளர்களின் முகவரிகளை  தபால் துறைக்கு வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் தற்போது  தபால்துறை ஊடாக நோயாளர்களுக்கான மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் இன்றும்(03) எதிர்வரும் 6ம் திகதியும் திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘இலங்கையின் நிலைமை கவலைக்கிடம்’

பிரதமர் ரணில் பதவி விலகுவது கட்டாயம் – மைத்திரி

33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் 10 பேர் கைது