(UTV | கொழும்பு ) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளை நிறுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவை பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தனது ஊழியர்களுக்கு வேதனமற்ற கட்டாய விடுமுறையை வழங்கி செலவீனங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதனால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு நூற்றுக்கு 25 வீதம் கட்டாய வேதன கழிவினை மேற்கொள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.