உள்நாடு

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு ) –  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (02) இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய காணொளி அழைப்பின் ஊடாக மட்டக்களப்பு குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மே 11 ஆம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்தார்.

Related posts

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

பிரதமரால் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம்

ரஷ்யாவில் ஐபோனுக்கு தடை!