உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மூலங்களில் நீரின் மட்டம் குறைவடைகின்றது. எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர்விநியோகத்தை மட்டுப்படுத்தாமல் தொடர்ந்து வழங்குவதற்கு நீர்விநியோகச் சபை கவனம் செலுத்துகின்றது.

திடீர் நீர்விநியோகத் தடை, நீர் கட்டணப் பட்டியல் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட விபரங்களைப் பெற்றுக்கொள்ள 071 93 99 999 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல்களை அனுப்புவதன் மூலம் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்து.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை

ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை