உள்நாடு

நாட்டின் பொருளாதாரத்தை பலமாக நடாத்திச் செல்ல ஆர்வம் காட்ட வேண்டும்

(UTV|கொழும்பு) – சுகாதார அதிகாரிகளின் சிபார்சுகளை ஏற்றுக்கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்தினைப் பலமாக நடாத்திச் செல்வது தொடர்பாக ஆர்வம் காட்ட வேண்டும் என அத்தியாவசிய சேவைகள் தொடர்பான செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

நேற்று(27) அலரி மாளிகையில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைப் பலமாக நடாத்திச் செல்வது தொடர்பாக கவனஞ் செலுத்தினார்.

வங்கிகள் மற்றும் நிதித் துறையுடன் தொடர்புடைய அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், இதன்போது பிரதானமாக பின்வரும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

• சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்காக அனைத்து வணிக வங்கிகளினதும் பணிகளையும் தொடர்ச்சியாக நடாத்திச் செல்லுதல்.

• காசோலைத் தீர்வை நடவடிக்கைகளை முறையாக நடாத்திச் செல்லுதல்.

• ATM இயந்திரங்களை முறையாகப் பேணிச் செல்லுதல் மற்றும் ATM நடமாடும் சேவைகளை நடாத்துவதற்கான ஆற்றல்.

• குறைந்தளவான ஊழியர்களின் பங்கேற்புடன் வங்கிக் கிளைகளில் சேவையைத் தொடர்ச்சியாக நடாத்திச் செல்லுதல்.

அதற்கேற்ப ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பிரதேசங்களில் நாளொன்றில் அனைத்து பிரதேச செயலகப் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு வங்கிக் கிளையைக் குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்குத் திறந்து வைத்திருக்க இணக்கம் காணப்பட்டது.

இவ்வாறான ஆபத்தான காலப்பகுதியில் முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் வங்கிச் சேவை தம்முடன் கொடுக்கல் வாங்கல் செய்பவர்களை வங்கிக்கு அழைப்பதை விடவும், வங்கி கொடுக்கல் வாங்கல் செய்பவர்களிடம் செல்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் நடமாடும் வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்தல் என்பவற்றுக்கான தேவை தொடர்பாக இதன்போது கவனஞ் செலுத்தப்பட்டது.

 

Related posts

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா

மதுபான உற்பத்திகளும் தடைப்படும் சாத்தியம்