உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV|கொழும்பு)- சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக இடைவௌி பின்பற்றாமல் சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றக்கூடிய அபாயமுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 50 வீதமான சமூக இடைவௌியினால் அதனை 15 ஆகக் குறைக்க முடியும் எனவும் 70 வீதமான சமூக இடைவௌி பேணப்பட்டால், இதனை 2.5 வீதம் வரை குறைக்க முடியும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது

மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால், அந்த இடைவௌி 70 வீதம் வரை உயர்வடைந்திருக்கும் என்பது வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நம்பிக்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அந்த இடைவௌி பாரியளவில் வீழ்ச்சியடைந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தலை நடத்துங்கள் – பொதுஜன பெரமுன வலியுறுத்தல்.

உலக பாரம்பரிய நக்கிள்ஸ் விளிம்பில் ஒரு ஹோட்டல் வளாகம்

கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வரவேண்டும் – அஜித் பீ பெரேரா [VIDEO]