உள்நாடு

தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்

(UTVNEWS | கொழும்பு ) – தற்போது நாட்டின் நிலைமையை கருத்தில்கொண்டு பிற்போடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல், குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் வரை பிற்போடபப்டும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

பாராளுமன்ற தேர்தலானது முன்னதாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்பட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் கொரோனா நிலைமையை அடுத்து, வேட்பு மனு தாக்கலின் பின்னர் அந்த தேர்தலானது தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரால் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

இந் நிலையில்ஏப்ரல் மாதத்தின் பின்னர் இந்த தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் தள்ளிப் போகலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவிப்பு

கப்ராலுக்கு மற்றுமொரு பயணத் தடை நீடிப்பு

எதிர்வரும் 28ம் திகதி மாபெரும் வேலை நிறுத்தம்