உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 21 ஆயிரத்து 283 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 இலட்சத்து 71 ஆயிரத்து 060 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 218 பேர் சிகிச்சைக்கு பின் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு புதிதாக 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் நேற்று மட்டும் 683 பேர் பலியாகி உள்ளனர்.

இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7,503 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,192 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் 944 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு

மாத்தறை – பெலியத்த ரயில் சேவையானது இன்னும் 04 மாதங்களில்

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்