விளையாட்டு

தனிமைப்படுத்தப்பட்ட சங்கக்கார

(UTVNEWS | COLOMBO) –இலங்கை கிரிக்கெட்டின் அணியின் முன்னால் தலைவரும் எம்.சி.சி கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார தன்னை தன்னைத் தானே சுய தனிமை செய்து கொண்டுள்ளார்.

அண்மையில் லண்டன் சென்று திரும்பிய சங்கக்கார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசின் அறிவுருத்தலுக்கு அமைய தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

பொலிஸார் அறிவுறுத்தலின் படி மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 திகதி வரையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் பதிவு செய்து தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த அறிவுறுத்தலை பின்பற்றுகின்றேன் என தெரிவித்தார்.

இதேவேளை,  கொரோனா தொற்று ஏற்பட கூடாது என பிரார்த்திப்பதாக அவரின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

நியூஸிலாந்து அணி 203 ஓட்டங்கள் குவிப்பு

செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்

இலங்கை கிரிக்கெட்டில் திலங்க எந்த பதவியும் வகிக்க முடியாது