உலகம்

கொரோனா வைரஸ் – டிரம்ப் மனைவிக்கு பரிசோதனை

(UTV|கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது .

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 43,700 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலி எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஜனாதிபதி டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அதே நாளில் மெலானியா டிரம்ப்புக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈபிள் டவர் மீண்டும் திறப்பு

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்

லசா காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பலி