உள்நாடு

சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுது அல்லது கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று(17) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு அரசியல் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், நுவரெலியா, வன்னி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பின் வீதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மருத்துவ சிகிச்சைகளின் பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ராஜித

பிரதமர் தலைமையில் நாளை விஷேட கலந்துரையாடல்