உள்நாடு

நாடாளாவிய ரீதியில் 12 தடுப்பு மத்திய நிலையங்கள்

(UTV|கொழும்பு) – கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக நாடாளாவிய ரீதியில் 12 தடுப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பம்மைமடு, கந்தக்காடு, பனிச்சங்கேணி, மயிலன்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படை முகாம்களில் இந்த நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொரவௌ, கல்கந்த, கஹகொல்ல, தியத்தலாவை இராணுவ மருத்துவமனை மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமிலும் இந்த மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மத்திய நிலையங்களில் இதுவரை 8 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 1,723 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாலைதீவு உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர் ஹரிணி

editor

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

editor