உலகம்

உலகம் முழுவதும் உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியது

(UTV | கொழும்பு) –ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 ஆக அதிகரித்துள்ளது.

அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது

இதேவேளை, உலகளாவிய ரீதியில் 6 ஆயிரத்து 501 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த தொற்றுக்குள்ளான 76 ஆயிரத்து 618 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரானில் ஒரு இலட்சத்தை தாண்டிய நோயாளிகள் எண்ணிக்கை

காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்களை இடம்பெயர – இஸ்ரேல் கடும் உத்தரவு.

ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவேன்