உலகம்

அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை முதல் உடல் உஷ்ணம் மற்றும் தொண்டை வலி இருந்தது.

உடனே நான் குயின்ஸ்லாந்து சுகாதார துறையை தொடர்பு கொண்டேன், உடனடியாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக இன்று மதியம் குயின்ஸ்லாந்து சுகாதார துறை அறிவித்தது .

தற்போது நான் நலமாக இருப்பதாக உணர்கிறேன் மற்றும் தொடர்ந்து மேலதிக விவரங்களை வழங்குகிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகளவில் பரவி உள்ளதால் குடிமக்கள் தங்களின் வெளிநாட்டு பயணங்களை மறுபரிசீனை செய்யுமாறு அவுஸ்திரேலியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் : ரோபோக்கள் மூலம் தாதியர்களை பாதுகாக்கும் சீனா

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

இஸ்ரேலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா