உலகம்

கொரோனா உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று – உலக சுகாதார அமைப்பு

(UTV|சீனா) – கொரோனா வைரஸானது உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றானது உலக அளவில் 114 நாடுகளில் சுமார் 118,000 பேருக்கு தொற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை மருத்துவ வசதிகள் குறைந்த நாடுகளில் கொவிட்-19 நோய் தடுப்புக்கு உதவும் வகையில், சீனா, உலக சுகாதார அமைப்புக்கு 2 கோடி அமெரிக்க டொலர் நிதி வழங்க உள்ளது. இதற்கான உடன்படிக்கையில் சீனாவும் உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வமாகக் கையொப்பமிட்டுள்ளன.

இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ராஸ் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்வதில், சீனாவின் அனுப்பவத்தைப் பின்பற்ற வேண்டும்.

சீனாவில் தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. நோய் பரவல் தடுக்கப்பட்டு, அதற்கான தடுப்பூசி ஆராயப்பட்டுள்ளது. இது, அரசின் தலைமை ஆற்றலுடனும், நாட்டின் மக்களின் ஒத்துழைப்புடனும் தொடர்புடையது. பிற நாடுகள் இந்த நடைமுறையைக் கடைபிடித்தால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

Related posts

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

editor

பிரேசில் உட்பட 12 நாடுகளுக்கு பயண தடை

நாளை முதல் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை