வணிகம்

விற்பனை கோழிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நியமனம்

(UTV|கொழும்பு) – நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை விற்பனை கோழிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துள்ளது.

அதன்படி தோலுடன் ஒரு கிலோ கிராம் கோழிக்கான விலையானது 430 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஒரு கிலோ தோல் இல்லாத கோழியை 530 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்ய முடியாது எனவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையல் விலைகள் கடுமையாக அதிகரித்ததன் காரணமாகவே இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கடந்த 63 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அரச வருமானத்தில் சேமிப்பு

இலங்கையில் mcdonald’s கிளைகள் மூடல்!

வட்டி விகிதத்தில் மாற்றம்