உள்நாடுவிளையாட்டு

பாடசாலை மட்ட போட்டியில் நவோத் பரணவிதான சாதனை

(UTVNEWS | COLOMBO) -இலங்கையின் பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டியில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் நவோத் பரணவிதான இன்று 409 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

காலி மஹிந்த கல்லூரியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் அம்பலாங்கொடை தர்மாசோக வித்தியாலயத்திற்கு எதிராகவே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் 329 பந்துகளுக்கு முகம் கொடுத்து 19 ஆறுகளையும் 34 நான்கு ஓட்டங்கள் ஊடாக குறித்த 409 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கட் வரலாற்றில் 400 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ள முதலாவது வீரர் என்ற சாதனையையும் இவர் பெற்றுகொண்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நவோத் பரணவிதான உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக சாந்த அந்தோனி பாடசாலையின் அவிஷ்க தரிந்து பெற்றுக்கொண்ட 350 ஓட்டங்களே இதுவரையில் சாதனையாக இருந்துள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய Three Phase Power அகற்றம்

editor

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியீடு

பிரித்தானிய இளவரசி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!