உள்நாடு

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவரின் உடல்நிலை தேற்றம்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனின் உடல்நிலை தேறிவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டில் கற்றுவரும் பசிந்து ஹிருசான் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைகளுக்காக மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் பல்வேறு குழுக்கள் உள்ளிட்ட சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் -பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது