உள்நாடு

ரவி உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனை

(UTV|கொழும்பு) – தமக்கு எதிரான பிடியாணையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பரிசீலிக்க உள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மத்திய வங்கியின் அதிகாரிகளில் ஒருவரான சங்கரப்பிள்ளை பத்மநாதன் மற்றும் அவரின் சட்;ட ஆலோசகரான சமன்குமார ஆகிய 4 பேரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 400,000 பைஸர் நாட்டுக்கு

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை அடக்க தனித்தீவு அறிவிப்பு