உள்நாடு

ஸஹ்ரானுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு மீளவும் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|மட்டக்களப்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 61 பேரின் 59 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தையடுத்து ஸஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஸஹ்ரானின் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா பயிற்சி முகாமில் பயிற்றி பெற்ற மற்றும் அந்த​ அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைதானோரில் இருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.

ஏனையவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

Related posts

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு

குருநாகல் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

இன்று முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு