கேளிக்கை

கொரோனாவுக்கு அஞ்சாத விக்ரம்

(UTV|இந்தியா)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் விக்ரம் உள்ளிட்ட கோப்ரா படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.

அஜய் ஞானமுத்து, ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், கோப்ரா படக்குழு எதற்கும் அஞ்சாமல் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

ரஷ்யாவில் நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Related posts

2020 ஆண்டுக்கான National Crush இவர் தான்

சந்திரிக்கா மீதான குண்டுத்தாக்குதல் – 22 வருடம் சிறையிலிருந்த ஐயர் மன்னிப்பில் விடுதலை

விடுதலைப்புலிகள் தலைவராக பாபிசிம்ஹா…