உள்நாடு

எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறையில் இருந்தால் எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைந்திருக்கும்

(UTV|கொழும்பு) – கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரைத்தை இதுவரை காலம் செயற்படுத்தியிருந்தால், மார்ச் மாதம் 10 முதல் அனைத்து வகையான எரிபொருட்களின் விலையை லீட்டருக்கு குறைந்தது 20 ரூபாவினால் குறைத்திருக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலைகளை ஒப்பிட்டு உள்ளூரில் நுகர்வோருக்கு அதிபட்ச நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்காக எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் ஒவ்வொரு மாதமும் 10 திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் மற்றொரு அத்தியாவசிய பொருட்களான உள்நாட்டு எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தையும் அறிமுகப்படுத்தியது.

செப்டம்பர் 2019 இல் எரிபொருள் விலை இறுதியாக திருத்தப்பட்டது. இப்போது சர்வதேச எண்ணெய் விலை பீப்பாய்க்கு 65 அமெரிக்க டொலரிருந்து 45 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்!

வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்