உள்நாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

(UTVNEWS | MULLAITIVU) – முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கைக்கு இணங்க மாவட்டத்தின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது

பிரதான கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

பொதுமக்கள் அவசரகால நிலை : நாளை விசேட கூட்டம்