(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து கல்வி மற்றும் கல்விசார பணியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் தற்போது 70 க்கும் அதிக நாடுகளில் கொரோனா வைரஸ் தோற்றாளர்கள் பதிவாகியுள்ளமை காரணமாக குறித்த நாடுகளில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தரும் தரப்பினர் இரண்டு வாரக் காலம் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கல்வி துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு கல்வி அமைச்சிடம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.