விளையாட்டு

கொரோனா வைரஸ் – ஆசிய கிண்ண வில்வித்தை போட்டியிலிருந்து இந்தியா விலகல்

(UTV|இந்தியா ) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய கிண்ண உலக தரவரிசை (Asia Cup world ranking tournament) வில்வித்தை போட்டியில் இருந்து இந்திய அணி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆசிய கிண்ண உலக தரவரிசை வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி (நிலை 1) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 15- ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு இந்திய விளையாட்டு ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து ஆசிய கிண்ண உலக தரவரிசை வில்வித்தை போட்டியில் இருந்து இந்திய அணி நேற்று விலகி இருக்கிறது. இது குறித்து உலக வில்வித்தை சங்கத்துக்கு, இந்திய வில்வித்தை சங்கம் கடிதம் மூலம் தனது விலகல் முடிவை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதில் இந்திய அணி வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு கடினமான இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2022 டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிப்பு

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்

நானும் கறுப்பினம் என வெறுக்கப்பட்டவன் : கெய்ல்