உலகம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ‘டுவிட்டர்’ நிறுவனம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

(UTV|அமெரிக்கா) – கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவுவதை தொடர்ந்து ‘டுவிட்டர்’ ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலும் கொரோனா வைரசுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமெரிக்காவும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபல சமூக வலைத்தளமான ‘டுவிட்டரின்’ தலைமை அலுவலகம், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு ‘டுவிட்டர்’ ஊழியர்களை அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளின் ‘டுவிட்டர்’ அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவரவர் வீடுகளில் இருந்தபடி பணியாற்றுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக ‘டுவிட்டர்’ மனிதவள பிரிவின் தலைவர் ஜெனிபர் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘டுவிட்டர்’ நிர்வாகம், முக்கியத்துவம் இல்லாத வர்த்தக பயணங்களையும், நிகழ்ச்சிகளையும் கடந்த வாரத்தில் இருந்தே நிறுத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்பு

கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுதீ

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!