உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | RATNAPURA) -ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொடகஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள், பதாகைளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் கொடகஹவெல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பெட்ரோல் கப்பல் இந்த வாரம் இலங்கைக்கு

நிதி குத்தகை நிறுவனங்களின் முறைகேடுகளை ஆராய 3 பேர் கொண்ட குழு

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை