கேளிக்கை

சூர்யா படத்தில் ஜோதிகா சட்டத்தரணி

(UTV|இந்தியா ) – சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பொன்மகள் வந்தாள்’. ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிற நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜோதிகா இப்படத்தில் சட்டத்தரணியாக நடித்துள்ளார். இப்படம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

Related posts

தம்பி வா, தலைமை ஏற்க வா

பிரபல நடிகை உயிரிழந்தார்

நேர்கொண்ட பார்வை படக்குழு வெளியிட்ட அடுத்த அறிவிப்பு