கேளிக்கை

ஏ.ஆர்.ரஹ்மான் வழிகாட்டலில் பெண்கள் மட்டும் நடத்தும் இசைக்குழு, ஸ்டுடியோ

(UTV|கொழும்பு) – மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த சுமார் 50 பெண் இசைக்கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒலிப்பதிவுக் கூடம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வழிகாட்டியாக செயல்படுவார்.

சுமார் 50 பெண் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து துபாய் நகரை மையமாக வைத்து புதிய இசைக்குழு மற்றும் இசை ஒலிப்பதிவுக்கூடம் (ஸ்டுடியோ) ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர்.

இவற்றுக்கு வழிகாட்டியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து செயல்பட ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு துபாயில் நடைபெறும் சர்வதேச பொருட்காட்சியிலும் 2021-ம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8-ம் திகதி அன்றும் நடைபெறும் இசைக்குழுவினரின் இரு இசை நிகழ்ச்சிகளையும் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையேற்று நடத்தவுள்ளார்.

இந்த இசைக்குழுவில் உள்ள பெண் கலைஞர்கள் ஐக்கிய அரபு அமீரகம், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியன் 2 படத்தில் அபிஷேக் பச்சன்?

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் லீக்