உள்நாடு

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று முதல்

(UTV|COLOMBO) – அரச தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று(02) வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒருவருட பயிற்சிக் காலத்தின் அடிப்படையில் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும் இவர்களுக்கு 20,000 ரூபா பயிற்சிக்கால சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

நாட்டில் 50,000 வரையான பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்றிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. அதன்படி அனைவரிடமும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

அரச தொழில்வாய்ப்புகளுக்காக விண்ணப்பித்த அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் இன்று(02) நியமனம் வழங்கப்படவுள்ளது. மார்ச் முதலாம் திகதி முதல் அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வகையிலேயே குறித்த நியமனம் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“சிறுபான்மை மதஸ்லங்களுக்கு ஆபத்தை உருவாக்கும் தொல்பொருள் திணைக்களம்” அமெரிக்கா ஆணையாளர்

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த கருத்து